search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுரவ் கோகாய்"

    ராகுல் காந்தி நாட்டின் அடுத்த பிரதமராக வருவதை மம்தா பானர்ஜி விரும்பவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகாய் கூறியுள்ளார். #Congress #MamataBanerjee #GauravGogoi
    கொல்கத்தா:

    மேற்குவங்காள மாநிலம் ராம்பூர் ஹட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகாய் பேசியதாவது:-

    திரிணாமுல் காங்கிரஸ் ஏற்பாட்டில் கொல்கத்தாவில் சமீபத்தில் எதிர்க்கட்சிகளின் மாநாடு நடந்தது. ஆனால் அக்கட்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஏதோ பிரச்சினை உள்ளது.

    ராகுல் காந்தி நாட்டின் அடுத்த பிரதமராக வருவதை அக்கட்சியும், மம்தாபானர்ஜியும் விரும்பவில்லை. அடுத்த பிரதமராக ராகுல் காந்திதான் பதவியேற்பார். அவரது தலைமையில்தான் புதிய அரசு பதவியேற்கும் என்பதை திரிணாமுல் காங்கிரசுக்கு நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    மம்தா பானர்ஜி பிரதமராக பதவியேற்க முடியாது என்பதை தெரிந்துகொண்டதால் திரிணாமுல் காங்கிரசார் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்கள்



    இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரசின் இந்த குற்றச்சாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி கூறும்போது,

    ‘‘எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்துகொண்டனர். இதை மறந்துவிட்டு கவுரவ் கோகாய் பேசுகிறார்’’ என்றார்.

    கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சிகள் பேரணியில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, அபிஷேக் சிங்வி கலந்துகொண்டனர். ராகுல் காந்தி, சோனியா காந்தி பங்கேற்காமல் வாழ்த்துக்களை அனுப்பி இருந்தனர். #Congress #MamataBanerjee #GauravGogoi
    ×